search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    புலவாயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    புலவாயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்

    • ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புலவாயோவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் கிரெய்க் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் அரை சதம் கடந்தனர். எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டாகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை

    இறுதியில், ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

    Next Story
    ×