என் மலர்
விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ்- டிங் லிரென் மோதிய 10-வது ஆட்டம் டிரா

- 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர்.
- இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 9 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 10-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. இந்நிலையில், 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர். முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவையாக உள்ளது. அதேவேளையில் முதன்முறையாக பட்டம் வெல்வதற்கு குகேஷுக்கும் மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவைப்படுகிறது. இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.