search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் vs டிங் லிரென் - டிராவில் முடிந்த 6வது சுற்று
    X

    உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் vs டிங் லிரென் - 'டிரா'வில் முடிந்த 6வது சுற்று

    • முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர்.
    • டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர்.

    சிங்கப்பூர்:

    இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

    இந்த நிலையில் 6-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நடப்பு சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லீரன் கடுமையாக போராடினார். ஆனால் குகேஷ் தற்காப்பு ஆட்டத்தை பயன்படுத்தி டிங் லீரனுக்கு பதிலடி கொடுத்தார். இறுதியில் இந்த ஆட்டம் 46வது நகர்த்தலில் டிரா ஆனது.

    Next Story
    ×