search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    யூரோ கோப்பை கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஜெர்மனி
    X

    யூரோ கோப்பை கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஜெர்மனி

    • போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதின.

    இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மனியில் ஃப்ளேரியன், முசைலா 10 மற்றும் 19-வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி வீரர் ரியான் போர்டியஸ் ஆக்ரோஷமாக விளையாடியதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஹவர்ட்ஸ், நிக்லஸ், கேன் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    அதன் பின் போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தனது ஐந்தாவது கோலை அடித்தது. அந்த அணியின் எம்ரே கேன் ஐந்தாவது கோலை அடித்தார். இதன் மூலம் 5 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றியை பெற்றது.

    Next Story
    ×