என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
கார்ல்சன் வெற்றிக்காக தீவிரமாக போராடுவார்.. என்னால் முடிந்ததை செய்வேன்.. பிரக்ஞானந்தா..!
- பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிரா ஆனது.
- இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் முதல் சுற்று இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் நடைபெற்றது. 35 நகர்வுகள் வரை இந்த போட்டி நீடித்தது. ரூக் நைட் பான் எண்டிங்கை நோக்கி போட்டி சென்ற காரணத்தால், இருவரும் போட்டியை சமன் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.
கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இறுதிப்போட்டி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி அளித்துள்ளார். அதில், "கடினமான போட்டியாகத்தான் இருக்கும், வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார். ஓய்வு எடுத்துவிட்டு, நாளை புத்துணர்ச்சியுடன் திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சியை செய்வேன்," என்று தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.