என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
சேப்பாக்கத்தில் முதல் தகுதி சுற்று: சி.எஸ்.கே.-குஜராத் அணிகள் 23-ந் தேதி பலப்பரீட்சை
- புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன.
- 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 'லீக்' ஆட்டங்களும், 'பிளேஆப்' சுற்றின் 2 போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி 'லீக்' ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெற்றி பெற்றன. மூன்றில் தோற்றது.
'பிளேஆப்' சுற்றின் 2 ஆட்டங்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) 23-ந்தேதியும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) போட்டி 24-ந்தேதியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-இரண்டாவது இடத்தை பிடித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். குஜராத் அணிக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும்.
புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன. லக்னோ 3-வது இடத்தை பிடித்து உள்ளது. 4-வதாக நுழையும் அணி இன்று இரவு தெரியும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத் தில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.
2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.