search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. பிபா இன்ஸ்டா பக்கத்தில் இளையராஜா பாடல்
    X

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. பிபா இன்ஸ்டா பக்கத்தில் இளையராஜா பாடல்

    • 2022 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி 3-வது முறையாக கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது.
    • குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

    2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றார்.

    மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கால்பந்து உலக கோப்பையை வென்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, FIFA உலகக்கோப்பை இன்ஸ்டா பக்கத்தில் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்ற வரிகளோடு இளையராஜா பாடலை வெளியிட்டுள்ளனர்.

    கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்மையில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமேல் பாய்ஸ்' திரைப்படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இந்த பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×