என் மலர்
கால்பந்து
நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் கடும் மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள்: 100-க்கும் மேற்பட்டோர் பலி
- போட்டியின்போது நடுவர் சர்ச்சைக்குரிய முடிவு வழங்கியதால் ரசிகர்கள் கடுங்கோபம்.
- கோபம் அடைந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் பலி.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.
கினியாவின் 2-வது மிகப்பெரிய நகர் N'Zerekore. இங்கு சுமார் 2 லட்சம் மக்கள் வசித்தி வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இரண்டு அணி ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினர். நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியதால் கோபம் அடைந்த ரசிர்கள் மைதானத்தை முற்றுகைியட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
?? | URGENTE: "Unas 100 personas han muerto" en violentos enfrentamientos entre aficionados al fútbol en Guinea, con los hospitales locales abarrotados de cadáveres, según un médico. pic.twitter.com/D29h9iTS19
— Alerta News 24 (@AlertaNews24) December 2, 2024
கினியாவின் ஜுன்டா தலைவர் மமாதி தவும்பௌயா ஏற்பாடு செய்திருந்த கால்பந்து தொடரின் ஒரு பகுதியான இந்த போட்டி நடத்தப்படடுள்ளது. கினியாவில் இது போன்று கால்பந்து தொடர் நடத்தப்படுவது வழக்கம்.