search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்லும்:  இந்திய விளையாட்டு ஆணைய முன்னாள் இயக்குநர் நம்பிக்கை
    X

    இந்திய ஆக்கி அணி வீரர்கள்            டேவிட் ஜான்

    ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்லும்: இந்திய விளையாட்டு ஆணைய முன்னாள் இயக்குநர் நம்பிக்கை

    • தற்போது அணியில் உள்ள ஜுனியர் வீரர்கள், 2028-ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள்.
    • எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மகளிர் அணி 4-வது இடத்தைப் பிடித்தது.

    இந்நிலையில் 2028-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி உச்சத்தை எட்டும் என்று, இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குநரும், ஒடிசா ஆக்கி சம்மேளன இயக்குநருமான டேவிட் ஜான் தெரிவித்துள்ளார்.

    தற்போது அணியில் உள்ள ஜுனியர் ஆக்கி வீர்ர்கள், 2028-ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு வீரருக்கும் அதிக அனுபவம் கிடைக்கும் என்றும் டேவிட் ஜான் கூறினார். இதனால் எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஹாலந்து ஆக்கி அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன என்றும் எனினும் தங்கப் பதக்கம் வெல்லும் அளவிற்கு இந்திய ஆக்கி அணி சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×