search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் விளையாட இந்திய வீரருக்கு தடை
    X

    பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் விளையாட இந்திய வீரருக்கு தடை

    • காலிறுதியில் அமித்துக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் விளையாட மாட்டார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கிபோட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷீட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் எப்.ஐ.எச் நடத்தை விதிகளை மீறியதாக கூறி அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் விளையாட மாட்டார்.

    Next Story
    ×