என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது இந்தியா
- ஸ்பெயின் அணிக்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் வீணடித்தது.
- இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.
ரூர்கேலா:
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. ரூர்கேலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
12வது நிமிடத்தில் துணை கேப்டன் அமித் ரோகிதாசும், 26வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்து அசத்தினர். அதன்பின்னர் இரு தரப்பிலும் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. இதனால் இந்தியா 2-0 என்ற கோல்கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணிக்கு ஐந்து பெனால்டி கார்னர்கள் கிடைத்த நிலையில், அதில் ஒன்றை ரோகிதாஸ் கோலாக மாற்றினார். இதேபோல் ஸ்பெயின் அணி மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. ஆனால் அனைத்தையும் வீணடித்தது.
இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 5-0 என வென்றது குறிப்பிடத்தக்கது.