என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு 2023: செஸ் போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா- பதக்க எண்ணிக்கை 107 ஆனது
- வில்வித்தையில் இந்தியா இன்று 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது.
- பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1வெண்கலம் வென்றுள்ளது.
இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
சீனா முதலிடத்திலும், ஜப்பான் 2வது இடத்திலும், தென் கொரியா 3வது இடத்திலும் உள்ளது.
Next Story






