என் மலர்
விளையாட்டு
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
- இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளம் மெதுவான தன்மையுடன், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆடுகளம் வறண்டு காணப்படுவதால் சீக்கிரமே வெடிப்பு ஏற்பட்டு சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜாவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.