search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒலிம்பிக் கிராமத்தில் 3 லட்சம் ஆணுறை விநியோகம்- கிராம இயக்குனர் தகவல்
    X

    ஒலிம்பிக் கிராமத்தில் 3 லட்சம் ஆணுறை விநியோகம்- கிராம இயக்குனர் தகவல்

    • ஒலிம்பிக் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்குவார்கள்.
    • 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது கொரோனா பரவல் காரணமாக உடல்ரீதியான தொடர்பை தவிர்க்கும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. 200 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவை செயின் நதியில் நடத்த போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதாவது தொடக்க விழாவின் முக்கிய அம்சமான வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு படகில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் படகில் 6 கிலோமீட்டர் தூரம் ஈபிள் கோபுரம் நோக்கி பயணிக்க இருக்கிறார்கள். 45 நிமிடங்கள் படகு அணிவகுப்பை பார்க்கலாம். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    ஒலிம்பிக் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்குவார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக 1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் இருந்து ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறையை வைக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது கொரோனா பரவல் காரணமாக உடல்ரீதியான தொடர்பை தவிர்க்கும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்த விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் சிரமமின்றி கிடைக்கும் வகையில் 3 லட்சம் ஆணுறை வரை வைக்கப்பட இருப்பதாக ஒலிம்பிக் கிராமத்தின் இயக்குனர் லாரென்ட் மிசாட் கூறியுள்ளார்.

    ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் விநியோகிக்கப்பட்ட ஆணுறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. "1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் ஆணுறைகள் 50,000 ஆகவும், 2008-ல் பெய்ஜிங்கில் 100,000 ஆகவும், 2012-ல் லண்டனில் 150,000 ஆகவும் உயர்ந்தது

    தென் கொரியாவில் 1988 சியோல் கோடைகால ஒலிம்பிக்கில் ஆணுறைகள் முதலில் வழங்கப்பட்டன.

    Next Story
    ×