search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. சர்ச்சையில் சிக்கிய விளம்பரம்.. சேவாக் என்ன சொன்னார் தெரியுமா?
    X

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. சர்ச்சையில் சிக்கிய விளம்பரம்.. சேவாக் என்ன சொன்னார் தெரியுமா?

    • இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • மேக்மைட்ரிப் சேவையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை கருத்தில் கொண்டு மேக்மைட்ரிப் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது. மேலும், இந்த போட்டியை காண இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேக்மைட்ரிப் வெளியிட்ட விளம்பர பதிவில், பாகிஸ்தான் அணி தோல்வியுற்றால், பயனர்கள் கீழ்கண்ட வார்த்தைகளை தெரிவித்து மேக்மைட்ரிப் சேவையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணி பத்து விக்கெட்டுகள் அல்லது 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 50 சதவீதமும், 6 விக்கெட்டுகள் அல்லது 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 30 சதவீதமும், 3 விக்கெட்டுகள் அல்லது 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 10 சதவீதமும் தள்ளுபடி பெறலாம் என்று மேக்மைட்ரிப் தெரிவித்து இருந்தது. இத்துடன் ரசிகர்கள், BoysPlayedWell, EkShaheenHaar அல்லது NoMaukaMauka போன்ற குறியீடுகளை பயன்படுத்தலாம் என்று மேக்மைட்ரிப் தெரிவித்து இருந்தது.

    இது தொடர்பான பதிவு வெளியான சில மணி நேரங்களில், அதிக வைரல் ஆனது. பலர், இத்தகைய விளம்பரம் வெளியிட்ட நிறுவனத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டனர். சிலர், நாம் தான் போட்டியை நடத்துகிறோம், நாமே விருந்தினர்களை கிண்டல் செய்யக் கூடாது என்ற வகையில் கருத்து பதிவிட்டனர். மேலும் சிலர், இது உண்மையான கிரிக்கெட்-க்கு அர்த்தம் கிடையாது என்று பதிவிட்டனர்.

    மேக்மைட்ரிப் வெளியிட்ட விளம்பரத்திற்கு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக், "அன்பு மற்றும் காதலில் கிடைக்காத சந்தோஷம், பாகிஸ்தான் தோற்றால் கிடைத்துவிடுகிறது. இப்படி யார் அழைப்பார்கள். இது மேக்மைட்ரிப்-இன் சரியான விளையாட்டு," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×