என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கரை கவுரவித்த நீடா அம்பானி
- துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
- ஈட்டி எறிதல், மல்யுத்தத்தில் இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியது.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும், ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைமை அதிகாரியுமான நீடா அம்பானி, இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
டோக்கியோ விளையாட்டுகளுக்குப் பிறகு, 'உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், மீதமுள்ளவற்றை கடவுளிடம் விட்டுவிடுங்கள்' என்று நமக்குக் கற்பிக்கும் நமது பண்டைய வேதமான பகவத் கீதையின் ஞானத்தைப் பின்பற்றியதாக மனு கூறினார். அதைத்தான் அவர் செய்தார்.
3 ஆண்டுக்குப் பிறகு விளையாட்டுகளில் அவர் தனது தேசத்தின் தலைவிதியை மாற்றினார் என தெரிவித்தார்.