search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    காதல் இதயங்களை ஒன்று சேர்த்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ்.. அசர வைக்கும் புதிய சாதனை
    X

    காதல் இதயங்களை ஒன்று சேர்த்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ்.. அசர வைக்கும் புதிய சாதனை

    • 17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 9 பிரபோசல்கள் நடைபெற்றுள்ளன.
    • ஜஸ்டின் பெஸ்ட் தனது காதலியான லைனி டங்கனுக்கு 2,700 மஞ்சள் நிற ரோஜாக்களுடன் பிரபோஸ் செய்தார்.

    காதல் நகரத்தில் ஒரு சாதனை

    வீரர்களால் அதிக காதல் பிரபோசல்கள் செய்யப்பட்ட ஒலிம்பிக் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளது பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடர்.

    17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 9 பிரபோசல்கள் நடைபெற்றுள்ளன.

    * பிரான்ஸ் தடகள வீராங்கனை ஆலிஸ் ஃபினோட் 3000மீ ஸ்டீபிள்சேஸ் சாதனையை முறியடித்து, போட்டிக்கு பிறகு தனது காதலனிடம் பிரபோஸ் செய்து கொண்டாடினார்.

    * சீன பேட்மிண்டன் வீரர் லியு யு சென் தங்கம் வென்ற பிறகு ஹுவாங் யா கியோங்கிற்கு பிரபோஸ் செய்தார்.

    * பிரெஞ்சு பெண்கள் ஸ்கிஃப் மாலுமிகளான சாரா ஸ்டெயார்ட் மற்றும் சார்லின் பிகோன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று கரை திரும்பியபோது அவர்களது பாட்னர்கள் திருமணத்திற்கு முன்மொழிந்தனர்.

    * அமெரிக்க ஒலிம்பியன் ஜஸ்டின் பெஸ்ட், தனது நாட்டிற்காக ரோயிங்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். அவர் தனது காதலியான லைனி டங்கனுக்கு 2,700 மஞ்சள் நிற ரோஜாக்களுடன் பிரபோஸ் செய்தார்.

    * அர்ஜென்டினா ஆண்கள் ஹேண்ட்பால் அணியை சேர்ந்த பாப்லோ சிமோனெட், தனது நீண்டகால காதலியும் ஹாக்கி வீரருமான மரியா பிலார் காம்பாய்க்கு பிரபோஸ் செய்தார்.

    * அமெரிக்காவின் ஷாட் புட்டர் பேட்டன் ஓட்டர்டால் தனது காதலி மேடி நில்லஸுடன் ஈபிள் கோபுரத்திற்கு முன்பாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

    * பிரேசிலின் டிரிபிள் ஜம்பர், அல்மிர் டோஸ் சாண்டோஸ் தனது காதலி தலிதா ராமோஸ்-க்கு பிரபோஸ் செய்தார்.

    * அமெரிக்காவின் அலெவ் கெல்டர் சக ரக்பி வீரருமான கேத்ரின் ட்ரெடரை பிரபோஸ் செய்தார்.

    * இத்தாலிய ரிதம் ஜிம்னாஸ்ட் அலெசியா மவுரெல்லிக்கு மாசிமோ பெர்டெல்லோனி பிரபோஸ் செய்தார்.

    நிறைவு விழாவின்போது பேசிய பாரீஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுத் தலைவர் டோனி எஸ்டன்குட், அன்பின் இந்த உணர்வுகள் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×