search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் முடிகிறது
    X

    ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் முடிகிறது

    • நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது.
    • 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 26-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 27-ந் தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது.

    இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டில் 48 வகைகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    வெற்றிகரமாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் முடிகிறது. 15-வது நாளான இன்று 39 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

    நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது. ரோடு சைக்கிளிங், மல்யுத்தம் (தலா 3 தங்கம்), தடகளம், வாட்டர் போலோ, கூடைப்பந்து, ஹேண்ட்பால், மாடர்ன் பெண்டத்லான், கைப்பந்து, பளு தூக்குதல் (தலா 1 தங்கம்) ஆகிய விளையாட்டுக்கள் கடைசி நாளில் நடைபெறுகிறது.

    ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. 2 பதக்கம் வென்று சாதனை படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் , ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

    Next Story
    ×