search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வினேஷ் போகத் பதக்கம் வெல்ல மேலும் ஒரு வாய்ப்பு.. வழக்கறிஞர் சொல்வது என்ன?
    X

    வினேஷ் போகத் பதக்கம் வெல்ல மேலும் ஒரு வாய்ப்பு.. வழக்கறிஞர் சொல்வது என்ன?

    • இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அவருக்காக இந்த வழக்கில் ஆஜரான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஸ்பாத் சிங்கானியா [Vidushpat Singhania] தெரிவித்துள்ளார்.
    • இன்னும் 10-15 நாட்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் கிடைக்கும்

    பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் மல்யுத்தத்தில் [50 கிலோ எடைப்பிரிவில்] இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்று பெருமையைப் பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக உள்ளதாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    அவரது மனுவை நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] ஆம் தேதி நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அடியாக அமைந்தது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத் தற்போது நாடு திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் பதக்கம் கிடைக்க வேறு எந்த வழியும் இல்லையா என்று பலருக்குக் கேள்வி எழுவது இயல்பே.

    அந்த வகையில் வினேஷ் போகத் பதக்கம் பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அவருக்காக இந்த வழக்கில் ஆஜரான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஸ்பாத் சிங்கானியா [Vidushpat Singhania] தெரிவித்துள்ளார். அதாவது, நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இன்னும் 30 நாட்களுக்குள் இந்த மேல் முறையீட்டினை செய்ய வேண்டும். ஆனால் தற்போது 'வினேஷ் போகத் மனு தள்ளுபடி' என்று ஒற்றை வரியில் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேறு எந்த விளக்கமும் தற்போதுவரை தரப்படவில்லை. இன்னும் 10-15 நாட்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே முழுமையான விளக்கம் கிடைத்தவுடன், ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் இந்தியா மேல்முறையீடு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×