search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிரதமர் மோடியை சந்தித்த செஸ் வீராங்கனை கொனேரு ஹம்பி
    X

    பிரதமர் மோடியை சந்தித்த செஸ் வீராங்கனை கொனேரு ஹம்பி

    • உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இதையடுத்து, கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப்போட்டியில் கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி 2-வது இடத்தில் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இன்று சந்தித்தார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கோனேரு ஹம்பியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு விளையாட்டு சின்னம் மற்றும் ஆர்வமுள்ள வீரர்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார். அவருடைய கூர்மையான அறிவும், அசைக்க முடியாத உறுதியும் தெரியும். அவர் இந்தியாவிற்கு மகத்தான பெருமையைக் கொண்டு வந்தது மட்டுமின்றி, சிறப்பானது என்ன என்பதை மறு வரையறை செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×