search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக்: காலிறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஏமாற்றம்
    X

    பாரீஸ் ஒலிம்பிக்: காலிறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஏமாற்றம்

    • இந்திய வீராங்கனை ரித்திகா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • இந்தியாவின் அமன் ஷெராவத் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, கிரிகிஸ்தானின் ஐபெரி கிஜியுடன் மோதினார். இந்தப் போட்டியில் இருவரும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், ரித்திகா 1-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஆனாலும் ரிபிசேஜ் முறையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நுழைய வாய்ப்புள்ளது.

    இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் நேற்று வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×