என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
நம்பிக்கையில்லா தீர்மானம்: இந்திய ஒலிம்பிக் சங்க கூட்டம் தள்ளி வைப்பு
- பி.டி.உஷாவுக்கும், நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு.
- சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
புதுடெல்லி:
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார். 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில் அவர் இருந்து வருகிறார்.
முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷா ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை அவர் மறுத்தார். இது தொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதற்கிடையே பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு இதற்கான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பி.டி.உஷா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இயக்குனர் ஜார்ஜ் மேத்யூ நிர்வாக குழு மற்றும் உறுப்பினர்களுக்கு ஈ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெறும் புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.