என் மலர்
விளையாட்டு
X
பாரா ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
Byமாலை மலர்30 Aug 2024 6:02 PM IST (Updated: 30 Aug 2024 6:08 PM IST)
- துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்திய அணி 2 பதக்கம் பெற்றது.
- ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் மொத்தம் 234.9 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்தார்.
கொரியா தங்கப் பதக்கமும், சீனா வெண்கலமும் வென்றது.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே. துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.
Next Story
×
X