என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
காமன்வெல்த் விளையாட்டு: நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்திச்செல்லும் ஷரத் கமல் மற்றும் நிகாத் ஜரீன்
- ஷரத் கமல் கலப்பு டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.
- நிகாத் ஜரீன் குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந் முதல் இன்று (ஆகஸ்டு 8-ந் தேதி) வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்தி சென்றார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரர்களாக டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஷரத் கமல் கலப்பு டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். நிகாத் ஜரீன் குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.