search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தமிழக வீரர் குகேஷ் தகுதி
    X

    கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தமிழக வீரர் குகேஷ் தகுதி

    • கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
    • தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர்.

    சென்னை:

    கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ஏப்ரல் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் 8 வீரர்களும், பெண்கள் பிரிவில் 8 பேரும் விளையாடுகிறார்கள். இதில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்வார்கள். சீனாவை சேர்ந்த டிங் லிரென் உலக செஸ் சாம்பியன் ஆவார். பெண்கள் பிரிவில் ஜூ வென்ஜுன் (சீனா) தற் போது உலக சாம்பியனாக உள்ளார்.

    இதனால் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

    இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு சென்னையை சேர்ந்த டி.குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர். இந்த வரிசையில் 17 வயதான குகேசும் இணைந்துள்ளார்.

    பீடே சர்க்கியூட் போட்டியில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் குகேஷ் கேன்டிடேட் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் சமீபத்தில் நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் பெற்று இருந்தார்.

    இதேபோல ஹம்பியும் கேன்டிடேட் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவுக்கு தகுதி பெற்றார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அதிக புள்ளிகளை பெற்றிருந்ததால் அவர் வாய்ப்பை பெற்றார்.

    1991-ம் ஆண்டு விஸ்வ நாதன் ஆனந்த் மட்டுமே கேன்டிடேட் செஸ் போட் டிக்கு தகுதி பெற்றார். தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டியில் 5 இந்தி யர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் பிரிவில் பிரக் ஞானந்தா, குகேஷ் (தமிழ் நாடு), விகித் குஜராத்தி (மராட்டியம்) பெண்கள் பிரிவில் வைஷாலி (தமிழ்நாடு), ஹம்பி (ஆந்திரா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

    கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

    ஆண்கள்: பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, குகேஷ் (இந்தியா) இயன் நேபோம்னி யாச்சி (ரஷியா), பேபினோ கருவானா, ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), நிஜாத் அபாசோவ் (அஜர்பை ஜான்), அலிரேசா பிர ஷஸ்ஜா (பிரான்ஸ்)

    பெண்கள்: வைஷாலி, ஹம்பி (இந்தியா), லீ டிங்ஜி, டான் ஷோங்கி (சீனா), கேத்தரினா லாக்னோ, அலெக்சான்ட்ரோ கோரியச்சினா (ரஷியா), நூர்சி யுல் சலிமோவா (பல்கேரியா), அன்னா முஷிசெக் (உக்ரைன்).

    Next Story
    ×