என் மலர்
டென்னிஸ்
ஆஸ்திரேலியா ஓபன்: போபண்ணா ஜோடி முதல் சுற்றோடு வெளியேற்றம்
- போபண்ணா ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது.
- 2-வது செட்டை 6(5)-7(7) என இழந்து ஏமாற்றம் அடைந்தது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கொலம்பியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் பேரியன்டஸ் ஜோடி ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்ட்டினஸ்- ஜாம் முனார் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-7(5) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. முதல் செட்டின் தொடக்கத்தில் போபண்ணா ஜோடி சிறப்பாக விளைாடினாலும், அதன்பின் ஸ்பெயின் ஜோடி உத்வேகம் பெற்று முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.
2-வது செட்டில் இரு ஜோடிகளும் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் ஸ்பெயின் ஜோடி 5-3 என முன்னிலை பெற்றிருந்தது.
அதன்பின் போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி 5-5 என சமநிலை பெற்றது. என்றாலும் ஸ்பெயின் ஜோடி அடுத்த இரண்டு கேம்களையும் வென்று டை-பிரேக்கரை 7-5 என முறியடித்து 7-5, 7(5)-6(5) என வெற்றி பெற்றது.
இதனால் முதல் சுற்றோடு போபண்ணா ஜோடி ஏமாற்றம் அடைந்தது.