என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சின்சினாட்டி ஓபன்: அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அதிர்ச்சி தோல்வி
    X

    சின்சினாட்டி ஓபன்: அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்க வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 4-6, 6-2, 4-6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். கோகோ காப் நடப்பு சாம்பியனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×