search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    யு.எஸ். ஓபன்: ஸ்வியாடெக், பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    யு.எஸ். ஓபன்: ஸ்வியாடெக், பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஜப்பான் வீராங்கனை எனா ஷிபாஹரா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக வீராங்கனை சோபியா கெனினை 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×