என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டாடா ஸ்டீல் செஸ்: இந்திய வீராங்கனை வைஷாலியுடன் கை குலுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் வீரர்
    X

    டாடா ஸ்டீல் செஸ்: இந்திய வீராங்கனை வைஷாலியுடன் கை குலுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் வீரர்

    • போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன்.
    • வணக்கம் கூற வேண்டும் என்று கூறினர்.

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் தொடரின் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தானை சேர்ந்த நோடிர்பெக் விளையாடினார். இந்தப் போட்டி துவங்கும் முன் நோடிர்பெக் வைஷாலிக்கு கை குலுக்க மறுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் பகிரப்படும் வீடியோவில் நோடிர்பெக்-க்கு எதிரான போட்டி துவங்கும் முன்பு வைஷாலி அவருக்கு கை குலுக்க முன்வந்தார். எனினும், நோடிர்பெக் வேண்டாம் என்று அப்படியே அமர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டதை அடுத்து நோடிர்பெக் நான் வைஷாலியை அவமதிக்கும் நோக்கில் அப்படி செய்யவில்லை என்று கூறினார். மேலும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அன்பான செஸ் நண்பர்களுக்கு, வைஷாலியுடனான போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன். மகளிர் மற்றும் இந்திய செஸ் வீரர்கள் மீதான மரியாதையுடன், நான் மத ரீதியிலான காரணங்களுக்காக பெண்களை தொட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."



    "முன்னதாக 2023-ல் திவ்யாவுடனான போட்டியின் போதும், இது போன்ற சூழ்நிலைகளில் அவ்வாறு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ, அதைதான் செய்வேன். நான் மற்றவர்களிடம் எதிர் பாலினத்தவரிடம் கை குலுக்க வேண்டாம் என்றோ, பெண்களை ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ கூற மாட்டேன். என்ன செய்ய வேண்டுமென்றாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்."

    "இன்று பல்மகாவிடம் நான் அதை கூறினேன், அவர் அதை ஏற்றுக் கொண்டார். அரங்கிற்கு வந்ததும், நான் அப்படி செய்யக் கூடாது என்றும், குறைந்தபட்சம் வணக்கம் கூற வேண்டும் என்று கூறினர். திவ்யா மற்றும் வைஷாலியுடனான போட்டி துவங்கும் முன் என்னால் அவர்களிடம் இதை கூற முடியவில்லை. அது சங்கடமான சூழ்நிலையாக மாறிவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×