search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இதுவே எனது கடினமான போட்டி: லக்ஷயாவை பாராட்டிய அக்சல்சென்
    X

    இதுவே எனது கடினமான போட்டி: லக்ஷயாவை பாராட்டிய அக்சல்சென்

    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • லக்‌ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர் என்றார் அக்சல்சென்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இன்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென் கூறுகையில், லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் லக்ஷயா சென் நிச்சயம் தங்கம் வெல்வார். அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    Next Story
    ×