search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் கொடியுடன் கதறி அழுத அர்ஷத் நதீம்- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
    X

    பாகிஸ்தான் கொடியுடன் கதறி அழுத அர்ஷத் நதீம்- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

    • ஒலிம்பிக் வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை வீசி உள்ளனர்.
    • பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    பாரிஸ்:

    2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தானை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். அவர் ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டு முறை 90 மீட்டருக்கும் அதிகமாக ஈட்டியை வீசி மாபெரும் சாதனை படைத்தார்.

    ஒலிம்பிக் வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை வீசி உள்ளனர். நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் என்பவர் 90.57 மீட்டர் தூரம் வீசியதே இதுவரை ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த இறுதிப் போட்டியில் இரண்டு முறை அர்ஷத் நதீம் முறியடித்தார். தனது இரண்டாவது முயற்சியில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனையை உடைத்தார். பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்த போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். ஹர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றதன் மூலமாக பாகிஸ்தான் 32 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


    இதனையடுத்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அர்ஷத் நதீம் பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை உடம்பில் சுற்றிகொண்டு உலா வந்தார். மேலும் அவரது பயிற்சியாளரை கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவரது வெற்றிக்கு இந்திய ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×