என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி: ரூ.20 லட்சம் பறிமுதல்
- திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
- அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்தக் காரில் லஞ்ச பணம் கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.
காரில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தார். மத்திய அரசு பணி என்று காரில் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர் அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவர் வைத்திருந்த அடையாள அட்டையைப் பார்த்தபோது அமலாக்கத் துறையை சேர்ந்த அங்கிட் திவாரி என கண்டறியப்பட்டது. இவர் கொண்டு வந்த பணம் லஞ்சம் வாங்கிய பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை நடத்தினர்.
இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மதுரை எஸ்.பி. சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் விசாரணை மேற்கொண்டார்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு இட ங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. அதில் டாக்டர் ஒருவரிடம் பெற்ற பணம் இந்த ரூ.20 லட்சம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேசம் மற்றும் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.