என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகள் வாந்தி, மயக்கம்: பேக்கரிக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
- பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
- உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் இடங்கண சாலையை அடுத்த மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38), இவர் தனது குழந்தைகளான யாசினி (9), யாசித்(8), சபரீஷ் (3) ஆகிய 3 பேருடன் கொங்கணாபுரம் அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.
அங்கு வழிபாடு செய்தவர் தனது குழந்தைகளுடன் மீண்டும் வீடு திரும்பிய நிலையில், கொங்கணாபுரம் பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து முட்டை பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில், திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த எடப்பாடி தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுரு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தின்பண்டங்களின் மாதிரிகளை சேகரித்ததுடன், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.