என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆந்திராவில் இருந்து அரசு பஸ்சில் 21 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
- ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர்
- 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெங்களூருவில் இருந்து வந்த பஸ்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதானவர்கள் சங்ககிரி தாலுகா அரசிராமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கின்ற ஆனந்தராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பூபதி ராஜா, சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ஆனந்தராஜ் ஆந்திர மாநிலத்தில் இருந்து பலமுறை கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்கு இருப்பது தெரிய வந்தது.
மேலும் இவர் ஆட்களை வைத்து ஆந்திராவில் இருந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி பஸ்களில் கஞ்சாவை கடத்தி வந்து ஓமலூர் எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓமலூர் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில், தொடர்ந்து தற்போது 21 கிலோ கஞ்சா கடத்தி வந்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.