search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போட்டோ ஸ்டூடியோவுக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில்
    X

    போட்டோ ஸ்டூடியோவுக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில்

    • போட்டோ ஸ்டூடியோவுக்கு உரிமம் வழங்க சண்முகத்திடம், நெப்போலியன் ரூ.2000 லஞ்சம் கேட்டார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர்.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் சண்முகம். இவர் தனது கடைக்கு உரிமம் பெற ராயபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உரிமம் வழங்கும் ஆய்வாளராக பணியாற்றிய நெப்போலியன் என்பவரை அணுகினார்.

    அப்போது போட்டோ ஸ்டூடியோவுக்கு உரிமம் வழங்க சண்முகத்திடம், நெப்போலியன் ரூ.2000 லஞ்சம் கேட்டார். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சண்முகம் மறுத்தார். இதையடுத்து சண்முகம் ரூ.1500 கொடுக்குமாறு கேட்டார். அதற்கு சண்முகம் சம்மதித்தார். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர். அதன்பிறகு ரசாயனம் தடவிய ரூ.1,500 பணத்தை நெப்போலியனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நெப்போலியனை கைவும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் இதுதொடர்பான வழக்கு சிறப்பு கோர்ட்டிலும் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரி நெப்போலியனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். இதையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×