என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மின்னல் தாக்கியதில் கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்- கடலோர காவல் குழும போலீசார் விசாரணை
ByMaalaimalar3 Nov 2023 11:29 AM IST
- இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
- திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41).
இவரது தம்பி செல்வமணி.(40), மகன் தஷ்விந்த் (20). இவர்கள் 3 பேரும் தமிழ்மணிக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென இடி மின்னல் படகை தாக்கியது. இதில் படகை இயக்கிய தஷ்விந்த் நிலை தடுமாறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து மற்ற இருவரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×