என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
செங்கல்பட்டு நகராட்சி கூட்டத்தில் தரையில் அமர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
- 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
- குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு நகராட்சி 27-வது வார்டு பகுதியில் உள்ள குண்டூர் ஏரி ரூ.3 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஏரிக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை முறையாக செலுத்தி 53 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சவுந்தர் ராஜன் முன்னிலை வகித்தார் கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க.கவுன்சிலர்கள் பானுப்பிரியா, சிந்தியா சுரேஷ், பவித்ரா சிவராஜன் சரிதாகுமார் ஆகியோர் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.கவு ன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நகராட்சி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.