என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டி பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு
- சென்னை கோட்டத்தில் 5 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.
- 200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ரெயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் கோடை காலத்தில் ரெயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பயன்பெறும் வகையில் முக்கியமான ரெயில் நிலையங்களில் பொதுப் பெட்டிகள் நிற்கும் பகுதியில் இந்த மலிவு விலை உணவு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்தில் 5 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருச்சி கோட்டத்தில் 3, சேலம்-4, மதுரை-2, பாலக்காடு-9, திருவனந்தபுரம் கோட்டம்-11 என முதல் கட்டமாக 34 ரெயில் நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் இந்த உணவு கவுண்டர் செயல்படுகிறது. 325 கிராம் எடை அளவில் 7 பூரி, மசால் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ.20. தயிர், எலுமிச்சை, புளியோதரை சாதம் 200 கிராம் கொண்ட எக்கனாமி மீல்ஸ் விலை ரூ.20, ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலத்தில் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயணிகள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.