search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டணி வைத்துக்கொண்டால் அந்த கட்சியின் கொள்கைகளை கேட்பதாக அர்த்தம் இல்லை- எடப்பாடி பழனிசாமி
    X

    கூட்டணி வைத்துக்கொண்டால் அந்த கட்சியின் கொள்கைகளை கேட்பதாக அர்த்தம் இல்லை- எடப்பாடி பழனிசாமி

    • வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைக்கிறோம்.
    • மாநில உரிமையை பெறுவதில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு கோரி, சிறுபான்மையினர் அமைப்பினருடனான கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    கூட்டணி சேர்ந்து விட்டால் அவர்களுடைய கட்சியின் கொள்கைகளை கேட்பார்கள் என்பது இல்லை, எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமையும். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைக்கிறோம்.

    தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம். மாநில உரிமையை பெறுவதில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எந்த மதத்தை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பது அதிமுக.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×