search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பச்சிளங்குழந்தையுடன் பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்
    X

    பச்சிளங்குழந்தையுடன் பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்

    • உனிசெட்டி என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் சாலை வசதி சரியில்லை என்று கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் பெண்ணை கீழே இறக்கிவிட்டு சென்று விட்டார்.
    • இரவு 7 மணியளவில் வந்த வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் மலைக்கிராமத்துக்கு சென்று சேர்ந்துள்ளார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கோடகரை பகுதியை சேர்ந்த 27 வயது பழங்குடியின பெண் ஒருவர் தனது 4-வது பிரசவத்துக்காக கடந்த 8-ந்தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் 10-ந்தேதி கருத்தடை ஆபரேசன் செய்துள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது தாய் மற்றும் குழந்தையுடன் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    உனிசெட்டி என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் இதற்கு மேல் சாலை வசதி சரியில்லை என்று கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் அவர்களை கீழே இறக்கிவிட்டு சென்று விட்டார்.

    பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேன்கனிக்கோட்டை-கோடகரை இடையே இயக்கப்படும் வாகனமும் 3 மணிக்கு புறப்பட்டு சென்று விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் பச்சிளங்குழந்தையுடன் அவர்கள் தவித்துள்ளனர்.

    பின்னர் தங்களது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் சுகாதார துறை இணை இயக்குனர் பரமசிவனுக்கு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து அவரது ஏற்பாட்டில் இரவு 7 மணியளவில் வந்த வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் மலைக்கிராமத்துக்கு சென்று சேர்ந்துள்ளார்.

    உனிசெட்டியிலிருந்து கோடகரை செல்வதற்கு 15 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பச்சிளம் குழந்தையுடன் நடு வழியில் ஆம்புலன்சிலிருந்து இறக்கிவிட்டு சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட டிரைவரை உயர் அதிகாரிகள் அழைத்து எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×