search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விரைவில் புது மெனு.. புத்துயிர் பெறும் அம்மா உணவகங்கள்
    X

    விரைவில் புது மெனு.. புத்துயிர் பெறும் அம்மா உணவகங்கள்

    • அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது.
    • சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில், அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ரூ.5, 2 சப்பாத்தி ரூ.3 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில்பெரும் வரவேற்பை பெற்றது.

    அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. பொதுமக்கள் உண்பதற்கான மேஜைகளின் கால்கள் உடைந்துள்ளன. இதனால் அங்கு உணவு அருந்த வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

    இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றையும் மாற்றி சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

    அம்மா உணவகத்தால் 20 கோடி ரூபாய் வருமானம், ஆனால் குறைந்த விலையில் உணவு வழங்குவதால் ரூ.140 கோடி செலவாகிறது. ஆண்டுதோறும் ரூ.120 கோடி நஷ்டத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.

    சமையலறையில் உள்ள ஃபிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பழுதடைந்த இயந்திரங்கள், சமையல் பாத்திரங்களை மாற்ற மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை விடுத்துள்ளது.

    பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

    Next Story
    ×