என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பசும்பொன்னில் 30-ந்தேதி தேவர் குரு பூஜையில் அண்ணாமலை பங்கேற்கிறார்
- முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, அரசு விழாவாக வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, அரசு விழாவாக வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வருகிற 30-ந்தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
Next Story






