search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Bomb Threat
    X

    டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • இ-மெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை :

    பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது

    இந்நிலையில், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுவும், டி.ஜி.பி சங்கர் ஜிவால் பெயரில் போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர் இ-மெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×