search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவடியில் 100 அரங்குகளில் நாளை புத்தக கண்காட்சி தொடக்கம்: 27-ந்தேதி வரை நடக்கிறது
    X

    ஆவடியில் 100 அரங்குகளில் நாளை புத்தக கண்காட்சி தொடக்கம்: 27-ந்தேதி வரை நடக்கிறது

    • காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
    • தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    திருநின்றவூர்:

    திருவள்ளூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தககண்காட்சியில் ரூ.1 கோடியே 20லட்சத்துக்கு புத்தகம் விற்பனை நடைபெற்றது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆவடியில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஆவடி,எச்.பி.எப். மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தக கண்காட்சியின் 'லோகோ' அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சி 'லோகோ' வை அறிமுகப்படுத்தினர்.இந்த புத்தக கண்காட்சி நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 27-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதற்காக கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

    சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதி னருக்கும் ஏற்ற வகையில் ரூ. 10 முதல் ரூ.1000 வரை புத்தகங்கள் விற்பனைக்கு வைக்க உள்ளனர். அனைத்து புத்தகங்களுக்கும் புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புத்தக கண்காட்சியில் தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×