என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னை மாநகராட்சி 122, 165-வது வார்டுகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்
- தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தனர்.
- தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் பெருநகரம் என்ற அந்தஸ்தை சென்னை மாநகரம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த முதல் பெண் மேயராக ஆர்.பிரியா தேர்வு செய்யப்பட்டார்.
மாநகராட்சி மன்றத்தில் தி.மு.க.வின் பலம் 153 உறுப்பினர்களை கொண்டு உள்ளது. அ.தி.மு.க. 15, காங்கிரஸ்-13, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
ம.தி.மு.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்களும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ஜனதா, அ.ம.மு.க. தலா ஒரு உறுப்பினர்களை கொண்டு உள்ளது. சுயேட்சை உறுப்பினர்கள் 5 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தனர். இதனால் வார்டுகள் காலியாக உள்ளன.
122-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஷிபா வாசு, 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணம் அடைந்தனர்.
கடந்த 7-ந்தேதி கலைஞர் கருணாநிதி நினைவு பேரணியில் பங்கேற்ற தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்தார். 3 கவுன்சிலர்கள் மறைந்ததையொட்டி அந்த இடங்கள் காலியாக உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளன. அதில் 122 மற்றும் 165 ஆகிய இரண்டு வார்டுகளுக்கு மட்டும் முதலில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில் இறந்த ஆலப்பாக்கம் சண்முகம் வார்டில் தற்போது நடைபெறவில்லை.
சென்னை மாநகராட்சி மன்ற செயலாளர் 122, 165 ஆகிய வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி விவரங்களை கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
அதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்கெங்கு காலி இடங்கள் உள்ளது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனரும் தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் இந்த இரண்டு வார்டுகளுக்கும் முறையான தேர்தல் நடைமுறைகளை அறிவிப்பார்.
சென்னையில் 3 வார்டுகள் காலியாக இருப்பதால் அந்த இடங்களில் போட்டியிட தி.மு.க., காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இப்போதே களத்தில் இறங்கி விட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்