search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
    X

    13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    • லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்திருந்தது.
    • மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.

    9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கரூர், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இன்று முதல் 11-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Next Story
    ×