search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீரென நுழைந்து போக்குவரத்து போலீசார் அதிரடி
    X

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீரென நுழைந்து போக்குவரத்து போலீசார் அதிரடி

    • பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்
    • தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது.

    சென்னை:

    சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

    எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்ற வேண்டும். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசாரின் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் போலீஸ் என ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை நீக்கி, வேப்பேரி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    வேப்பரி போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    Next Story
    ×