search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து சரிவு
    X

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து சரிவு

    • மாம்பழங்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கடந்த மே மாதத்தில் மாங்காய் வரத்து உச்சம் பெற்ற நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினமும் 80 டன் வரை மாங்காய்கள் வந்தது.

    சேலம்:

    இந்தியாவில் மாம்பழ உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதில் குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு.

    சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டனம், வரகம்பாடி, அடிமலைபுதூர், ஆத்தூர், வாழப்பாடி, நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துபட்டி, தும்பல், கருமந்துறை, மேட்டூர், காமலாபுரம், வனவாசி, எடப்பாடி, சங்ககிரி மற்றும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சேலம்-பெங்களூரா, மல்கோவா, அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, நடுசாலை, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் அதிக அளவில் விளைகின்றன.

    இந்த மாம்பழங்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    கடந்த மே மாதத்தில் மாங்காய் வரத்து உச்சம் பெற்ற நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினமும் 80 டன் வரை மாங்காய்கள் வந்தது. அப்போது மல்கோவா, குண்டு, சேலம்-பெங்களூரா, சேந்தூரா, குதாதத், கிளிமூக்கு உள்பட மாம்பழங்கள் வரத்து அதிகரித்தது. இதனால் மாம்பழங்கள் ஒரு கிலோ 50 முதல் 150 வரை விற்கப்பட்டது . இதனால் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து குறைந்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 10 டன் அளவுக்கே மாம்பழங்கள் வரத்து உள்ளது. இதனால் கடைகளில் மாம்பழங்கள் இருப்பு குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மாம்பழங்கள் வரத்து மேலும் குறையும் என்றும் ஒரு மாதத்தில் முற்றிலும் மாம்பழங்கள் வரத்து நின்று விடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×