search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி- ஜூலை 16ல் தீர்ப்பு
    X

    செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி- ஜூலை 16ல் தீர்ப்பு

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
    • மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு.

    சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க மனுவில் கோரப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×