search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரியில் நடைபெற உள்ள முக்கிய பதவிகளுக்கான தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    • ஏரி பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.
    • பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதால் தேர்தலை ரத்து செய்து மாற்று தேதியில் நடத்த வேண்டும்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவுரிவாக்கம் கொளத்தூர் - குமரசிரலப்பாக்கம் இரண்டு ஏரிகளில் வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் பட்டியலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த இருவரின் பெயர்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளதால் இரண்டு ஏரிகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி தேர்தலை நடத்தாமல் ரத்து செய்து மாற்றுத் தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யக்கூடாது எனவும் கூறி மனு அளித்ததாகவும் அதனை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் தேர்தல் நடத்துவது குறித்து முறையாக அறிவிப்பை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் வெளியிடவில்லை எனவும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×